கம்யூட்டர் முன் அமர்ந்து வெகு நேரம் வேலைசெய்பவரா நீங்கள்

கம்ப்யூட்டரின் திரையானது கண்பார்வையில் இருந்து 20 முதல் 26 இஞ்ச்சுகள் தள்ளியிருக்கிற வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் கம்ப்யூட்டர்கள் இருக்கும் அறைகள் ஏர்கண்டிஷன் செய்யப்படுவதால், ஏசியில் இருந்து வரும் காற்று கண்ணுக்கு நேராக படும்படி உட்காரக்கூடாது. கம்ப்யூட்டர் இருக்கும் அறையில் வெளிச்சம் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பளீர் வெளிச்சமும் இருக்கக்கூடாது.
மங்கலான வெளிச்சமாகவும் இருந்து விடக்கூடாது. கம்ப்யூட்டர்பணியின் போது ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒருமுறையும் கம்ப்யூட்டர் திரையில் இருந்து கண்களை அகற்றி 20 மீட்டர் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.இப்படிச் செய்யும்போது கண்களுக்கு இயல்பான பாதுகாப்பு கிடைக்கக்கூடும்.
அதோடு கம்ப்யூட்டரில்`ஆன்ட்டி ரிப்ளெக்ஷன் கோட்டிங்` உள்ளவாறு பயன்படுத்த வேண்டும். மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அதில் `ஆன்ட்டி ரிப்ளெக்ஷன் கோட்` உள்ளதாக அணிய வேண்டும். நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் கண்ணில் உள்ள விழிலென்சின் சுருங்கி விரியும் தன்மை குறைவு படுகிறது.இது வெள்ளெழுத்து என்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் கம்ப்யூட்டர் திரையில் உள்ள எழு ;த்துக்களை படிப்பதற்கும், கண்ணுக்கு அருகில் வைத்து வேலை செய்வதற்கும் சிரமமாய் இருக்கும். இந்த பிரச்சினையை சரி செய்ய `ப்ராக்ரெஸிவ் `கண்ணாடி உள்ளது. இதிலும் `ஆன்ட்டி ரிப்ளெக்ஷன் கோட் ` செய்து அணியலாம்.
பை போகல் எனப்படும் இரட்டை கண்ணாடி அணிபவர்கள் மிகுந்த சிரமப்பட்டு கம்ப்ïட்டரை பார்க்க வேண்டியிருக்கும்.இதற்கு `ப்ராக்ரெஸிவ் லென்ஸ `டன் எஸ்.பி.2 என்ற `ஸ்பெஷல் டிண்ட்டடு` செய்த கண்ணாடியை அணிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டரால் உலர்ந்த கண்கள் பாதிப்பு ஏற்பட்டால் கண் டாக்டர் அறிவுரைப்படி சொட்டு மருந்து வகையான `லூப்ரிகேட்டிங் ட்ராப்ஸ்` பயன்படுத்தலாம்.
தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி கண் சிமிட்டல் குறைந்து போனவர்கள் அடிக்கடி சிமிட்டலை தொடர வேண்டும். அதோடு கண்களை மூடிக் கொண்டு வட்டச்சுழற்சி முறையில் ஒருமுறை சுழற்ற வேண்டும். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து பின்பு கண்களை திறந்து மூச்சை மெதுவாக விட வேண்டும். கம்ப்யூட்டர் அத்யாவசியம் என்றான பிறகு அதனால் கண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இந்த விதத்தில் சரி செய்து கொள்ள முடியும். இதனால் வீணான பயம் தேவையில்லை.