நாமக்கல் | |
— தேர்வு நிலை நகராட்சி — | |
| |
| |
அமைவிடம் | |
நாடு | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
சட்டமன்றத் தொகுதி | நாமக்கல் |
மக்கள் தொகை • அடர்த்தி | 53,040 (2001[update]) • 5,180 /km2 (13,416 /sq mi) |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பரப்பளவு | 10.24 ச.கி.மீs (3.95 sq mi) |
இணையதளம் | www.municipality.tn.gov.in/namakkal |
நாமக்கல் (Namakkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்[1].
பொருளடக்கம்[ |
[தொகு] வரலாறு
"நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது இராம சந்திர நாயக்கர் கட்டிய கோட்டை உள்ளது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார். மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் 1933ல் இப்பாறை அருகே நடைபெற்றது.இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது.
- உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடலக அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
- நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (Feeds) ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது.[2]
- மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (Sego) எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன,
- இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும். இது பாறையானதால் மாலையில் ஏறினால் வெப்பம் குறைவாக இருக்கும் அல்லது காலையில் ஏறி வெப்பம் தாக்குவதற்குள் இறங்கினால் நலம். தண்ணீர் & சில திண்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது. குரங்குகள் உள்ளதால் உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.
- அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணித மேதை இராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஓரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
- புகழ்மிக்க ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.
- மலையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
- நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.
- நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அம்மண சாமியார் என்பவர் சமாதி நிலையை அடைந்துள்ளார்.
- நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்தக்காப்பட்டியில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது உள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (Mini Bus) வசதி உள்ளது.
- நைனா மலையில் அருள்மிகு வரதராச பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500 லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
[
நாமக்கல் மற்ற நகரங்களுடன் சாலை வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை வாரனாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 ( தேசிய நெடுஞ்சாலை 7 - NH7 இந்தியாவிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை )நாமக்கல் வழியாக செல்கிறது. அருகிலுள்ள நகரங்கள் சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ) , கரூர் (45 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ). சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாக செல்லும். நாமக்கல்லில் தொடர்வண்டி நிலையம் இல்லை. நாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று, பணி மெதுவாக நடந்து வருகிறது. மல்லூர், இராசிபுரம், புதுசத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இரும்புப்பாதை திட்டம் செல்கிறது. அருகில் உள்ள பெரிய தொடர்வண்டி (புகை வண்டி) நிலையங்கள் சேலம் மற்றும் ஈரோடு. அருகில் உள்ள வானூர்தி நிலையம், சேலம்.[
நாமக்கல் தரமான பள்ளிகள் & கல்லூரிகள் நிறைந்த இடம். நாமக்கல் கல்லூரிகள் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.கல்லூரிகள் பட்டியல்
- அரசு கால்நடை மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்.
- அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி (இருபாலர்), லத்துவாடி
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி
- பிஜிபி அறிவியல் & கலைக்கல்லூரி
- செல்வம் அறிவியல் & கலைக்கல்லூரி
- டிரினிட்டி பெண்கள் கல்லூரி
- பிஜிபி பொறியியல் & தொழிற்நுட்ப கல்லூரி
- அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியற் கல்லூரி
- செல்வம் தொழிற்நுட்ப கல்லூரி
- முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி
- முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி
- முத்தாயம்மாள் பல்தொழில்நுட்பக் கல்லூரி
- விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி
- கந்தசாமி கண்டர் கல்லூரி
] பள்ளிகள் பட்டியல்
- பாரதி துவக்கப்பள்ளி , ரெட்டிப்பட்டி.
- பாரதி உயர்நிலைப்பள்ளி , ரெட்டிப்பட்டி.
- பாரதி மேல்நிலைப்பள்ளி , ரெட்டிப்பட்டி.
- அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு
- அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு
- நகராட்சி உயர் நிலைப்பள்ளி
- Dr. M S உதயமூர்த்தி பள்ளி (M S உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர்)
- கந்தசாமி கண்டர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- குறிஞ்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- ஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- அண்ணா நேரு மெட்ரிகுலேசன் பள்ளி
- பாரதி மேல்நிலைப்பள்ளி
- நாமக்கல் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- ஸ்பெக்ரம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- பிஜிபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- மாருதி வித்யாலயா
- அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பரமத்தி
- அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரமத்தி
[தொகு] மருத்துவமனை
நாமக்கல் அரசினர் மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ART மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி இங்குள்ளது.- Anti Retro-Viral Treatment (ART)
- Anti Retro-Viral drugs (ARV)
குறிப்பிடத்தக்க சிறப்புகள்
- நாமக்கல் மாவட்டம் கோழி வளர்ப்புக்குப் பெயர்பெற்றது.
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை யின் ஊர்
- சிலம்பொலி செல்லப்பனின் ஊர்.
- டாக்டர் பி. சுப்பராயன் - முன்னாள் தமிழக முதல்வர்
- கணிதப் பேரறிஞர் இராமானு'சன் அவர்களின் தாயார் நாமக்கலில் உள்ள அருள்மிகு நாமகிரி அம்மனின் பக்தை
- நாமக்கல்லில் உள்ள ஆஞ்சனேயர் கோவிலிலுள்ள சிலை மிகப் பெரிய சிலைகளில் ஒன்று.