மே மாதம்!,
மற்ற பிற மாதங்களை விட மே மாதம் நமது சந்தைகளுக்கு முக்கியமானது. கடந்த காலங்களில் மறக்கவே முடியாத மாபெரும் சரிவுகளை தந்த மாதம் இது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சந்தைகள் ஒரு திட்டமிட்ட ஒழுங்கில் செயல்படுவதை அவதானிக்கலாம். அதாவது முந்தைய வருட மே மாதத்தில் சரிவு ஏற்பட்டால் அடுத்த வருட மே மாதம் கணிசமான உயர்வினை தருகிறது.
இந்த நிகழ்வு கடந்த அய்ந்து வருடங்களாய் முறை வைத்தாற் போல மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில் இந்த வருடம் உயர்வுகளைத் தரவேண்டும். என்னாவாகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போதைய நிலையில் சந்தைகள் பலவீனமாக முடிவடைந்திருப்பதைப் போல தோன்றினாலும் மிக முக்கியமான தாங்கு நிலைகளில் முடிவடைந்திருப்பதை மேலே இருக்கும் தேசிய நிஃப்டியின் வாராந்திர வரைபடத்தில் அவதானிக்கலாம்.
இந்த வாரத்தினை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் 5692 முக்கியமான திருப்பு நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்கு கீழ், இதற்கு மேல் என்றே இந்த வார சந்தையினை அணுகிட விரும்புகிறேன். இந்த நிலைகளுக்கு கீழ் 5625  முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.
இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் நாளின் துவக்கம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்ட செய்தியை எதிரொலிக்கும். மென் பொருள் நிறுவனம் ஒன்று வங்கித் துறையைச் சார்ந்த ஒருவரை தலைவராக கொள்ள இருப்பதை சந்தைகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை உங்களைப் போல நானும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.
தேசிய நிஃப்டியில் நாளின் நெடுகே கவனிக்க வேண்டிய நிலைகள்….
5582 – 5638 – 5667 – 5696 - 5725 - 5743 – 5772 – 5801 -5831