ஒசாமா பின் லேடன் என்கிற மனிதர் வீழ்த்தப் பட்டுவிட்டார். அவரைச் சார்ந்தவருக்கு அவர் ஆபத்பாந்தவர், சாராதவர்களுக்கு கொடியவர். இந்த செய்தியானது, நான் இதை எழுதிக் கொண்டிருக்கிற இந்த நிமிடம் வரை சந்தைகளில் எந்தவொரு எழுச்சியையும் ஏற்படுத்திட வில்லை.மாறாக பின்னடைந்து கொண்டிருக்கின்றன. நான் அமெரிக்க சந்தைகளைச் சொல்கிறேன்.
நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த திருப்பு நிலையான 5692 நிலைகளில் நேற்றைய சந்தைகள் முடிவடைந்திருக்கின்றன. இந்த நிலைகளுக்கு கீழ் சந்தைகள் முடிவடைந்தால் மட்டுமே சந்தையில் பலவீனம் தலைதூக்கும்.
இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் 5646 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த நிலைகளில் இருந்து சந்தைகள் மீளும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. எனவே அவசரப் பட்டு குறுகிய கால வர்த்தக முடிவுகள் எதனையும் எடுக்க வேண்டாம்.
இன்று மத்திய ரிசர்வ் வங்கி தனது புதிய கடன் கொள்கைகளை அறிவிக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. எனவே நாளின் நடுவில் திடீர் உயர்வுகளோ அல்லது பின்னடைவுகளோ ஏற்படலாம். எனவே தின வர்த்தகர்கள் ஆகக் கூடிய கவனத்துடன் செயல்பட வேண்டுகிறேன். லாபத்தினை உடனுக்குடன் உறுதி செய்து கொள்ளவும்.
இனி வரும் நாட்களில் எனது வர்த்தக குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.