மென்பொருள் செய்தி
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு
[ வெள்ளிக்கிழமை, 17 யூன் 2011, 04:38.36 மு.ப GMT ]
கணணியை தினமும் பயன்படுத்தும் போது பல்வேறு விதமான கோப்புக்கள் கணணியில் குப்பையாக தேங்கி நிற்கும்.
இதுபோன்ற கோப்புக்களை கணணியை விட்டே அகற்ற எதாவதொரு கிளினர் மென்பொருளை பயன்படுத்தி வருவோம். நாம் அனைவரும் அறிந்த கிளினர் என்றால் அது சிகிளினர் மட்டுமே ஆகும்.
இது தவிர இன்னும் சில மென்பொருள்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறன. அவற்றில் ஒன்று தான் Sys Optimizer ஆகும். இது கணணியில் உள்ள தேவையற்ற Junk கோப்புக்களை கணணியை விட்டு அகற்ற பயன்படுகிறது.
மேலும் இணையம் பயன்படுத்தும் போது Temp மற்றும் Junk கோப்புக்கள் கணணியில் அதிகம் தேங்கும். இவற்றை கணணியை விட்டு அழிக்க இந்த Sys Optimizer மென்பொருள் உதவுகிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணணியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் Sys Optimizer மென்பொருளை ஒப்பன் செய்யவும்.
பின் தோன்றும் விண்டோவில் Analyse என்னும் பொத்தானை அழுத்தவும். பின் Delete என்னும் பொத்தானை அழுத்தி கோப்புக்களை நீக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலமாக கணணினுடைய செயல்பாட்டில் மாற்றத்தை காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். அளவில் மிகச்சிறிய மென்பொருள் ஆகும்.
g.mohanprabakar

Share/Bookmark