எங்களுக்கென நதி இருந்தது ....யாராலும் பெயர் சூட்டப்படாத பறவைகள் எங்களின் வனம் முழுதும் குதுகளித்து கிடந்தன,.பூமியின் பாரிய பரப்புகளை அதிர்வித்து மகிழ காட்டாறுகள் எங்கள் வசமிருந்தன..அவ்வபோது எம் குழந்தைகளை மகிழ்விக்க எங்களின் மூத்தி நீலி இருந்தாள்..நாங்கள் மற்ற உயிரினங்களை போல உணவு சேகரிக்க வயல் வெளிகளை படைத்திருந்தோம் ..எங்களின் காதலை முன் மொழிய ஆவாரம் பூக்களை எம் பெண்களுக்கு சூட்டி மகிழ்ந்த நினைவுகள் இப்பொழுதும் மிச்சமிருக்கின்றன..இப்பொழுது நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன...வேட்டையாடிய ..உழைத்து சேகரித்த உணவை ஒன்றாய் சமமாய் முதலில் குழந்தைகளுக்கும் ஊனமுற்றவருக்கும் முதியவர்களுக்கும் கொடுத்து பின் நாங்கள் பசியாறிய பொழுதுகளை ஆரிய படையெடுப்பில் பலிகொடுத்தோம் சாதியாக எங்களை நாங்களே பிரித்து கொள்ள பணிக்க பட்டோம் ..முதலில் இங்கிருந்தே நாங்கள் வேறானோம் ..பின் நிலம் ..பின் வனம்.... பின் எங்களை மனிதர்களாய் பழக்கப்படுத்திய எங்களின் மொழி ..எங்களின் பாடல் ..எல்லாம் வருபவனிடம் கொடுத்து கொடுத்து கட்டுண்டோம் ..எல்லாம் முடிந்ததது ...எமக்காக கரும் புலியாக காட்ச்சியளித்த தலைவனும் இல்லை ..ஒன்றே ஒன்றை மட்டும் மிச்சம் வைத்திருக்கிறோம்..அது அடிமை ..

g.mohanprabha
 cell +91 9688971001