கோழிhttp://tawp.in/r/69l


கோழி
ஒரு கறிக்கோழி
ஒரு கறிக்கோழி
காப்பு நிலை
கொல்லைப்படுத்தப்பட்டவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு பறவை
வரிசை: Galliformes
குடும்பம்: Phasianidae
பேரினம்: Gallus
இனம்: G. gallus
சிற்றினம்: G. g. domesticus
முச்சொற்பெயர்
Gallus gallus domesticus
தன் குஞ்சுகளுடன் ஒரு கோழி.
கோழி மனிதனால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு பறவையாகும். இதில் பெண்ணினம் கோழி எனவும், ஆணினம் சேவல் எனவும் வழங்கப்படுகிறது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது ([1]). இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் தொழில்முறை கோழிப் பண்ணைகளுக்கு பெயர் பெற்றது.

[